தொட்டியத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
திருச்சி தொட்டியம் அழகு நாச்சியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (60). இவர் தொட்டியம் லட்சுமி டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பகுதியில் நடந்த செய்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் அவர் மீது மோதியது இதில் சண்முகம் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தொட்டிய அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே சண்முகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அவரது மகன் பொன்னர் கொடுத்த புகாரின் அடிப்படையில்
விபத்தை ஏற்படுத்திய தொட்டியம் மகேந்திரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 20) என்பவர் மீது தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சமயபுரத்தில் முதியவர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் அருகாமையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென்று மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை தட்டி எழுப்ப முயன்றனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் சமயபுரம் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் விரைந்து சென்று மயங்கி கிடந்த அந்த முதியவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்
