Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில் குட்டி மலை ரோடு பகுதியில் அனுமதி இன்றி மது பெற்ற கிராபட்டியை சேர்ந்த வேளாங் கன்னி (40) எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் ( 42) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துஅவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று கேகே நகர் பகுதியில் ஆவின் கொட்டப்பட்டு பகுதியில் மது விற்ற ஒச்சுகாளை (38) என்பவரையும்,பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் மது விற்ற முகமது முஜீப் (30, )பொன்னேரிபுரத்தை சேர்ந்த முகமது காசிம் (42) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!