Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டெல்லி, உபி, பஞ்சாபில் தாக்குதல் நடத்த முயன்ற 4 பேர் அதிரடி கைது

உத்தரபிரதேசம், டில்லி மற்றும் பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 பேரை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படை இணைந்து நடத்திய சோதனையில், மெஹ்காப், ககன்தீப் சிங் என்கிற குரி, ஷாரூக் மற்றும் முஷாரப் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கும்பல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருத்துவமனைகள், ஒரு அரசியல் கட்சி அலுவலகம் மற்றும் ஒரு பள்ளி நடத்துனர் ஆகியோரை இலக்காகக் கொண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மெஹ்காப் மற்றும் ககன்தீப் சிங் ஆகியோர் ஏற்கனவே இலக்கு வைக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று உளவு பார்த்துள்ளனர். ஷாரூக் மற்றும் முஷாரப் ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் மருத்துவமனைகளில் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான வழிகளைத் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது. உளவு பார்த்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானில் உள்ள தாதா பாட்டிக்கு அனுப்பியுள்ளனர்.
பாட்டியின் நெட்வொர்க் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கிடைத்தவுடன் இந்தத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தாதா பாட்டியின் தொடர்புடைய நான்கு வெவ்வேறு குழுக்களை இதுவரை முறியடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!