அயோத்தி ராமர் கோயிலில் வரவிருக்கும் சவன் ஜூலா மேளா மற்றும் கன் வாரியா யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் தரிசன ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. தினமும் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஆக.8-11 மற்றும் 23-28 ஆகிய தேதிகளில் கோவிலுக்குள் நுழைய பக்தர்களுக்கு ‘பாஸ்’ வழங்கப்படவுள்ளது. மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை அதிகரிக்கவும் கோயில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
