ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற இந்திய அணியின் பயிற்சியின் போது, விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷனுக்கு முதுகு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்ததை அடுத்து, அவர் பேட்டிங் பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் தொடரின் முதல் போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து மருத்துவ குழுவின் கண்காணிப்பிற்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
