Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு அவர் ராஜா 48 இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிந்தது அவரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். அதே விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் எல்லையம் குடியைச் சேர்ந்த நாகூர் கனி 37 என்ற வாலிபரும் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முகமது அலி 57 என்பவரும் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது ஏர்போர்ட் போலீசார் அவரையும் கைது செய்தனர்.
இதேபோல
நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த வேறொரு விமானத்தில் வந்த
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது 55 என்பவரை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையை அவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிந்தது போலீசார் அவரை கைது செய்தனர்

error: Content is protected !!