Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா பொங்கலூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் வயது 38 இவர் மேக்ஸ் மகேந்திரா மேக்ஸ் பிக் அப் வண்டியில் கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி உறையூரில் இறக்குவதற்காக ஜீயபுரம் வழியாக சென்ற போது,ஜீயபுரத்தில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு பின்னர் திருச்சி நோக்கி சென்ற பொழுது கம்பரசம்பேட்டை பறவைகள் பூங்கா அருகில் வெளிச்சத்தில் வண்டி நிறுத்தினர். அப்போது சிகப்பு கலர் ஸ்கார்பியோ கார் ஒன்று வந்து லாரியின் அருகில் நின்றது. பின்னர் காரில் இருந்து இறங்கிய 6 பேர் லாரியின் அருகில் சென்று டிரைவரிடம் உட்கார்ந்து டிரைவரின் கழுத்தில் அருவாளை வைத்தும் கத்தியை காட்டி அவரைமிரட்டி லாரி டிரைவரை அவர்கள் வந்த காரில் கடத்தி சென்று, லாரி டிரைவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின், வெள்ளி மோதிரம் வெள்ளி செயின் ஆகியவற்றை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல், அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு அதிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டனர். பின்னர் லாரி டிரைவரை ஓயாமரி அருகே காரில் கடத்திய வரை இறக்கிவிட்டு பின்னர் காரில் சென்றவர்கள் தப்பி ஓடி விட்டனர் .பின்னர் சம்பவ இடத்திற்கு லாரி டிரைவர் ராமாயணம் வந்து பார்த்த போது ஒரு பெட்டிகள் அடங்கிய கோழிகளும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து டிரைவர் சௌந்தர்ராஜன் ஜீயபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து , சிகப்பு கலர் காரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக திருச்சிகம்பரசம்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த பரத் வயது 32, இவர் காங்கிரஸ் பிரமுகர்என்று கூறப்படுகிறது. சிந்தாமணியை சேர்ந்தமுகில் குமார் வயது28, மேலசிந்தாமணியை சேர்ந்த மணிகண்டன் வயது39,குடமுருட்டிசஞ்சய் காந்திநகரை சேர்ந்த ரபீக் வயது 31 ஆகிய 4 பேரை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர். மேலும் சம்மவத்தில் தொடர்புடைய மற்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் ஜீயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

error: Content is protected !!