சென்னை, அம்பத்தூரில் 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கேசவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார்இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 500 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அம்பத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
