கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு நிலங்களை காங்கிரஸ் எம்.பி. கே. கோபிநாத் ஆக்கிரமித்துள்ளதாக ஆவணங்கள் உறுதிப்படுத்திய நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை சட்டப்படி அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கே. கோபிநாத் வைத்துள்ள 22 சென்ட் பட்டாவின் உண்மைத்தன்மையை 3 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
