வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தனிப்பட்ட கருத்துகள் அல்லது அதிகாரிகளால் எழுப்பப்படும் கேள்விகள், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான கருத்து வேறுபாடாக கருதப்படாது என்றும், எஸ்ஐஆர் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
