Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

28.03.2026 இரவு 8 மணிக்கு முன்பாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே உடல் சிதறி இறந்துள்ளார். இறந்த நபர் பச்சை கலர் அரைக்கை சட்டையும், ஊதா மற்றும் கருப்பு நிறத்தில் கைலியும், வைகிங் பாக்கெட் வைத்த ஜட்டியும் அணிந்துள்ளார். இறந்த உடலை திருச்சி இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் திரு சேவுகன் அவர்கள் கைப்பற்றி திருச்சி அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து விசாரணை செய்து வருகிறார். இறந்த நபரைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 90805 63321 மற்றும் 79044 19620. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!