உளுந்தூர்பேட்டை அருகே பூர்வீகச் சொத்தின் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் (VAO) அசோக்குமார் லஞ்சம் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட அப்துல் சலீம் ஷேக் என்பவர், அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காகப் பொதுமக்களிடம் தட்டேந்தி பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். கிராம நிர்வாக அலுவலரின் ஊழல் போக்கைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
