Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மிசா கொடுமையை சந்தித்த முக்கிய தலைவர் மு.க.ஸ்டாலின் – திருமா.,

மிசா கொடுமையை சந்தித்த முக்கிய தலைவர் மு.க.ஸ்டாலின்-திருமா.,

தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக பாடுபடும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இது வெற்றிக் கூட்டணி என்று பெயரிட்டிருக்கிறோம்.எனவே, வெற்றி பெறுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என நம்புகிறேன். தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு உண்டு. தவெக கூட்டணியில் ஒரு அங்கமாக இருப்பதால், தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக பாடுபடும். இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வோம். CPI, CPIM கட்சிகள் ஆட்சிக்கு ஆதரவு தொடர்கிறது என தெளிவு பட கூறி இருக்கிறார்கள்.. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு இடது சாரிகள் ஆதரவு உண்டு என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆதரவு கட்சியாக இருந்த நாங்கள் கூட்டணி கட்சியாக பரிணாமம் அடைந்துள்ளோம். தவெக கூட்டணி அறம் சார்ந்து செயல்படுவதில் கவனமாய் இருக்கும்.

மிசா கொடுமையை சந்தித்த முக்கிய தலைவர்களுள் மு.க.ஸ்டாலினும் ஒருவர். அதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இது குறித்து தான் பேசியது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் என முதல்வர் தெரிவித்தார். உள்நோக்கத்துடன் கூறவில்லை என்றும் கூறினார்” என்றார்.

error: Content is protected !!