தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு வாணிபம் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் இரண்டு கடைகள், மக்கள் பாதை, கோவை சாலை, காமராஜ் மார்க்கெட், வெங்கமேடு, உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 6 மதுபானக் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் ஒரு சில கடைகள் விரைவில் மூடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுபானக் கடைகள் மூடப்பட்டதற்கு பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், இதனால் குடும்பங்களில் அமைதி நிலை ஏற்பட்டு, சமூக பிரச்சனைகள் குறையும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
