Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆசிரியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்… பள்ளியில் பயங்கரம்..

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இதில், 30 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும், 6 வயது சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதில், சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டுள்ளான். இந்த தாக்குதலில் ஆசிரியை பலத்த காயமடைந்து உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி காவல் தலைமை அதிகாரி ஸ்டுவ் ட்ரூ கூறும்போது, 6 வயது சிறுவனை போலீஸ் காவலில் எடுத்து உள்ளோம். ஆசிரியையைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் வேறு மாணவர்கள் யாருக்கும் தொடர்பு எதுவும் இல்லை. துப்பாக்கி சிறுவனுக்கு எப்படி கிடைத்தது? இதன் பின்னணி என்ன? என்பது பற்றி விசாரிக்க வேண்டி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!