Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

14வயது சிறுமியிடம் அத்துமீறல்- 61வயது முதியவர் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (வயது 61). இவர் 14 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதியவர் கணபதி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர் மீது போக்சோவில் கணபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

error: Content is protected !!