சென்னை பார்த்தசாரதி திருக்கோயிலில் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு 655 கிராம் தங்க நாகாபரணம் சமர்ப்பணம்!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு 655 கிராம் (22 கேரட்) எடையுள்ள மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தங்க நாகாபரணம் அர்ப்பணிக்கும் புனித நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சலானி குழுமத்தின் தலைவர் திரு. ஜெயந்திலால் சலானி அவர்கள் தலைமையில் ‘சலானி

ஜுவல்லரி மார்ட்’ சார்பில் இந்தச் சிறப்புமிக்க தங்க நாகாபரணம் திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கி அர்ப்பணிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு ரமேஷ் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்து சமய அறநிலையத்துறை (HR & CE) ஆணையர் டாக்டர் T.G. விநய் IAS அவர்கள் முன்னிலை வகித்து நிகழ்வினை சிறப்பித்தார்.
