Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 7 பேர் பலி

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை, சாலையோரத்தில் இருந்த யாத்ரீகர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 

குஜராத்தில் நேற்றிரவு (ஏப்., 12) அஜாக்கிரதையாக ஓட்டப்பட்ட ஒரு லாரி கூட்டத்தின் மீது மோதியது. இந்தச் சம்பவத்தில் ஆறு யாத்ரீகர்களும், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டம்ப்பர் லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்தனர் என்றும், இறந்தவர்களில் நான்கு பேர் பெண்கள்  . சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அதிகாலை 1.30 மணியளவில் லக்தார்-விராம்கம் நெடுஞ்சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக லக்தார் காவல் ஆய்வாளர் யோகேஷ் படேல் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை உடனடியாகத் தெரியவில்லை என அதிகாரி தெரிவித்தார்.சம்பவத்திற்குப் பிறகு லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், அவரைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்தது.

error: Content is protected !!