குளித்தலை அருகே நங்கவரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கறவை மாட்டிடம் பால் கறந்து கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன்.
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சூரியனூர் சந்திரன் நங்கவரம் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்

கூறியும் பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
அப்போது ஒருவர் வீட்டில் கறவை மாட்டிடம் பால் கறந்து கொடுத்து நூதன பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
மேலும் விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் எண்ணற்ற பல திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி உள்ளார். எனவே உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தாருங்கள் வாக்களித்து மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு 2.0 அமைய வாக்களியுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்
