Skip to content
Home » 78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நகர் 1 கிளை மேலாளர் சிவமயில்வேலன் தலைமை வகித்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவிகளில் முதற்கட்டமாக 78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை நீலாதேவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!