Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் தொகுதியில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு – 25 மனுக்கள் தள்ளுபடி

கரூர் சட்டமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக ஆசி.தியாகராஜன், அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி மருத்துவர்.கருப்பையா, தமிழக வெற்றிக் கழகம் மதியழகன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 100 வேட்பாளர்கள் 108 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜெனரல் அப்சர்வர் ராஜீவ் குமார் ஸ்ரீ வஸ்து முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை செய்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு உட்பட்டதில் 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 25 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் அதிக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகுதியாக கருதப்படுகிறது.

error: Content is protected !!