Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் திடீர் சாவு

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

கல்லக்குடி அருகே 8-ம் வகுப்பு மாணவன் திடீர் சாவு
திருச்சி, லால்குடி புள்ளம்பாடி ஆரியன் லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சேட் முகமது. இவரது மகன் முகமது யாசின் (வயது 14) இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 31ம் தேதி வழக்கம் போல் யாசின் பள்ளிக்குச் சென்றார். பின்னர் திடீரென பள்ளி வளாகத்தில் வாந்தி எடுத்து வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். பள்ளி நிர்வாகத்தினர் யாசினை மீட்டு புள்ளம்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உடல்நலம் தேறி மறுநாள் டிசார்ஜ் செய்யப்பட்டார்.அதன் பின்னர் மீண்டும் அந்த மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கள்ளக்குடியில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கிலும்,
பின்னர் லால்குடி அரசு மருத்துவமனையிலும்
சேர்த்தனர்.அதன்
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் முகமது யாசின் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை சேட் கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் கையை அறுத்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகன் பிரகாஷ்ராஜ் (வயது 19). மதுவுக்கு அடிமையான இவர் தந்தையுடன் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2 நாட்களுக்கு முன்பு மது போதையில் தனது இடது கையை அவரே அறுத்துக் கொண்டார்.
இதனால் அவரது கையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
இதனால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்குள்ள இரும்பு ஆங்கிளில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை சசிகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!