Ex.அமைச்சர் மற்றும் தவெக நிர்வாகி விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 பேர் மீதான குட்கா முறைகேடு வழக்கில் சாட்சிகள் விசாரணை எப்போது தொடங்கும் என சிபிஐ தரப்பிடம் கேள்வி எழுப்பிய சென்னை சிறப்பு நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் நவ.11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இவ்வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தவெக நிர்வாகி விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
