Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த மாதம் திடீரென்று காணாமல் போனார்.இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி மீட்கப்பட்டது தொடர்ந்து அவரை அவரது வீட்டாரிடம் ஒப்படைத்த போது அந்த சிறுமி அவர்களுடன் செல்ல மறுத்தார்.இதை தொடர்ந்து அந்த 14 வயது சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகள் காப்பகத்தில் தங்கி இருந்த சிறுமி அங்குள்ளவர்களிடம் தனக்கு சிலர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறினார்.இதை எடுத்து காப்பகத்தில் உள்ளவர்கள் குழந்தைகள் நலஅலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.இதை எடுத்து குழந்தைகள் நல குழுவினர் அந்த சிறுமியை சந்தித்து நடந்த விவரத்தை கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைகள்நல அலுவலர் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு கோட்டை மகளிர் போலீசாருக்கு புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் கோட்டை மகளிர் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணைநடத்தினார்கள் விசாரணையில் அந்த 14 வயது சிறுமிக்கு முதலியாசத்திர பகுதியை சேர்ந்த 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் பாலியல் தொந்தரவு அளித்தது தெரிய வந்தது. இதை எடுத்து போலீசார் ஏழு சிறுவர்கள் உட்பட 9 பேரை கைது செய்து உள்ளனர்.சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஏழு சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!