Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

குடும்ப தகராறு-மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையம் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவர் பாபு தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீதேவியின் சடலத்தைக் கைப்பற்றிய ஆம்பூர் கிராமிய காவல்நிலையப் போலீசார், வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கணவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உடைய ராஜபாளையம் பகுதியில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு திடீரென தீவிரமடைந்ததில், ஆத்திரமடைந்த கணவர் பாபு தனது மனைவி ஸ்ரீதேவியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததைக் கண்ட பாபு, உடனடியாக அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீசார், ஸ்ரீதேவியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

error: Content is protected !!