சிவகங்கை அருகே தனியார் பள்ளி வேன் மீது லாரி மோதி நேரிட்ட விபத்தில், வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 9 மாணவ, மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுமுறை நாளான இன்று தடையை மீறிப் பள்ளி இயங்கியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
