Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 9வயது சிறுவன் கொலை.. 17வயது சிறுவன் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கருக்காகுறிச்சி கிராமத்தில், ஓரினச்சேர்க்கைக்கு உடன்பட மறுத்த 9 வயது சிறுவன் ஒருவன், 17 வயது சிறுவனால் மிகக் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவனை கந்தர்வகோட்டை காவல் நிலைய போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கருக்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் திடீரென காணாமல் போயுள்ளார். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்தபோது, அச்சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். விசாரணையின் போது, அந்த 17 வயது சிறுவன், பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாகவும், அதற்கு அச்சிறுவன் கடுமையாக மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்து அவனது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அச்சிறுவனை உடனடியாகக் கைது செய்தனர்.

error: Content is protected !!