Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடலூர்….. அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு….. 4பேர் கைது

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் அம்பத்கேர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்தது. சத்தம் கேட்டு அம்பலவாணன் பேட்டை கிராம பொது மக்கள் பதறி அடித்து ஓடிச் சென்று பார்த்தனர்.  அப்போது இளைஞர்கள் சிலர் டூ வீலரில் கத்திக்கொண்டு  வேகமாக  சென்றுள்ளனர்.

இதையடுத்து, அம்பலவாணன் பேட்டை பொதுமக்கள் காவல்துறையில் புகார் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகிய 4 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!