Skip to content

தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது…

தஞ்சை கொடிமரத்துமூலை அருகே புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பெயரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அங்கு சென்று  சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை போலீசார் பிடித்து

விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (47) என்பதும் அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருவதும் கடையில் விற்பனைக்காக 102 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!