Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலைக் கடித்தது…

அரியலூர் மாவட்டம் நடுக்கஞ்சங்கொல்லை கிராமம் கொள்ளிட ஆற்றின் கரையோரத்தில் பெரும்பாலான மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். அதேபோல் வழக்கம்போல் நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மனைவி சின்னம்மா (70) என்பவர் மேய்ச்சலுக்காக தனது ஆடுகளை கொள்ளிடம் கரையோரம் மேய்க்க ஓட்டி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் கரையில் ஒதுங்கி படுத்திருந்த முதலை எதிர்பாராத விதமாக திடீரென மூதாட்டியின் காலை பிடித்து இழுத்து கடித்து குதறியது. இதில் அவருக்கு இடது கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து சத்தம் போட்டு கதறியுள்ளார். . அப்போது அக்கம் பக்கத்தினர் சின்னம்மாவின் அலறல்சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை முதலையின் பிடியில் இருந்து பத்திரமாக மீட்டனர். முதலை கடித்ததில் அதே இடத்தில் மயங்கிய நிலையிலிருந்த மூதாட்டியை 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!