Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தி.மு.க. சார்பில் 6 இடங்களில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இன்று தி.மு.க. மாநகரம் மத்திய மாவட்டம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி,ரோஸ் மில்க் ,மோர் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஒன்றிய செயலாளர் முரசொலி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கவுன்சிலர்கள் நீலகண்டன், உஷா, அண்ணா பிரகாஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், பகுதி செயலாளர்கள் சதாசிவம், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ரயிலடி, கரந்தை, பள்ளி அக்ரஹாரம் , வடக்கு வீதி, காவேரி நகர் ஆலமரத்து பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களிலும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!