Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீவிரமடைந்த போராட்டம்-வாலிபர்கள் கைது, ஜந்தர் மந்தர் சாலைகள் மூடல்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதிவி விலக வேண்டும் என வலியுறுத்தி SFI-DYFI இளைஞர்கள் டெல்லியில் ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி சென்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் ஐசா அமைப்பின் நிர்வாகிகள் உட்பட சுமார் 150 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் சார்பில் இந்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், காவல்துறை இதற்கு அனுமதி மறுத்து, தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. தடையை மீறி ஜந்தர் மந்தரில் கூடிய போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

SIR முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தை பாஜக அரசின் காவல்துறை ஒடுக்குகிறது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில், ஜந்தர் மந்தர் சாலைகளை டெல்லி காவல்துறை மூடியது.

error: Content is protected !!