Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்  திருவலஞ்சுழி நடுபடுைகை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்
ஆகியோர் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்ததாக அரியலூர் ,பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தகவல் கிடைத்தது.

அடுத்து நேரில் சென்று ஆய்வு செய்த டாக்டர் மாரிமுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தொடரும் போலி டாக்டர்கள் கைது சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!