Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆடி 3வது வெள்ளி…108 பட்டுப் புடவை அலங்காரத்தில் பெரியநாயகிஅம்மன்…

அரியலூர் நகர், மேலத்தெருவில் எழுந்தருளி உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 108 பட்டுப் புடவைகள் சாத்தப்பட்டு பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்கரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரியநாயகி அம்மனை

தரிசனம் செய்தனர். முன்னதாக பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அதே போன்று புடவை அலங்காரத்தில் பெரிய நாயகி அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!