Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கருணாநிதி உருவம் பொறித்த ரூ. 100 நாணயம்…18ம் தேதி வௌியீடு….எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

முத்தமிழ் அறிஞர்கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி (ஞாயிறு) மாலை 6.50 மணிக்கு  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கிறது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  மத்திய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.  அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் கருணாநிதி  உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.  அவரது உருவத்திற்கு கீழ் தமிழ் வெல்லும் என தமிழிலேயே எழுதப்பட்டு உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் , பாஜக தலைவர் அண்ணாமலை  உள்ளிட்டோருக்கும்  அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!