Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பராமரிக்காமலும்,  பாதாள சாக்கடை உள்பட பல்வேறு திட்டங்களை  விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும், குப்பை சேகரிப்பு,  குடிநீர் பராமரிப்பு தனியாருக்கு விடப்பட்டதை கண்டித்தும்,  பயணிகள் நிழற்குடை பராமரிக்கப்படாததை கண்டித்தும் சொத்து வரி, வீட்டுவரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும் அதிமுக  சார்பில் வரும் 20ம் தேதி    திருச்சியில்  அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

வரும் 20ம் தேதி (செவ்வாய்)காலை 10.30 மணிக்கு  மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில்  இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.அதிமுக அமைப்பு செயலாளர்  , முன்னாள் அமைச்சர் ப. மோகன் தலைமையில்  முன்னாள் துணை மேயரும்,  மாநகர் மாவட்ட செயலாளருமான  ஜே.சீனிவாசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் அனைத்து நிர்வாகிகள்,  மாநகராட்சி முன்னாள், இந்நாள்  நிர்வாகிகள் மாநகர் மாவட்டத்தில் பலவேறு நிலைகளில் பணியாற்றி வரும்  அதிமுக நிர்வாகிகள் , அதிமுக செயல்வீரர்கள் அனைவரும்   ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும்படி  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!