தங்கலான் ரீலீஸ் ஆகியுள்ள நிலையில் அடுத்ததாக பா. ரஞ்சித் மீண்டும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் ஹீரோவாக சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘ஜெர்மன்’ என்ற படம் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பது. இப்படம் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா நடக்கிறார்.
அடுத்த படத்தில் சூர்யாவுடன் இணைகிறார் பா. ரஞ்சித்…
