Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடியரசு தின முன்னெச்சரிக்கை…. பெரம்பலூரில் போலீசார் தீவிர சோதனை….

ஜனவரி 26ம் தேதி நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியின் அறிவுறுத்தலின் படி பெரம்பலூரில் ஜனவரி 25 ஆம் தேதியான இன்று காலை சுமார் 10 மணியளவில்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடை வீதி தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெரம்பலூர் மோப்ப நாய் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் தலைமையில் தலைமை காவலர் ஜெயகாந்தன், காவலர்கள் செல்வேந்திரன், சக்திவேல் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!