Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேசிய வாக்காளர் தினம்….மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

13-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு இன்று பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ப.ஶ்ரீ வெங்கடபிரியா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியவாறும் சென்றனர். பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இப்பேரணி முடிவுற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.அங்கயற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!