கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் முக்கியகுற்றவாளி சஞ்சய் ராய். இந்த கொலை சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை டிஎன்ஏமற்றும் தடயவியல் சோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும்.
மருத்துவமனைக்கு வாங்கப் பட்ட டி.பி மருந்துகள் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, அதற்கு பதில் போலி மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நுரையீரல் நிபுணரான பெண் மருத்துவர், நெஞ்சக மருந்து துறையில் நடைபெற்ற இந்த மோசடியை கண்டுபிடித்தாரா? இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அமித் மாளவியா கூறினார்.
