Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனாங்கோடு என்ற இடத்தில்  நியூ இந்தியா அஸ்யூரசன்ஸ்  என்ற  இன்சூரன்ஸ்  கம்பெனியின் கிளை உள்ளது.  பொதுத்துறை நிறுவனமான இந்த  நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடடிடம்  முழுவதும்  பற்றி எரிந்தது.  உடனடியாக அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர்.  தீயில் சிக்கி பெண் ஊழியர்கள் 2 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் ஒருவரது பெயர் வைஷ்ணா என தெரியவந்துள்ளது. இன்னொருவரது பெயர் தெரியவில்லை. தீயணைக்கும் படை வீரர்கள் வந்து போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!