Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்தன்கோபு (29) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த சில தினங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து சோர்வாக இருந்த சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர் அப்போது சிறுமி நடந்ததை கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் அரவிந்தன்கோபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!