Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

படைக்கலன் ஆலை தொழிலாளர்கள்……..பழைய பென்சன் கோரி ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் அருகே  துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலை உள்ள எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு துப்பாக்கி தொழிற்சாலையில் காந்தி உருவ பேனருக்கு மாலை அணிவித்து மலர் தூவியதோடு எம்ப்ளாய்ஸ் யூனியன் தலைவர் ஜெயபாலன் தலைமையிலும் எச் ஏ பி பி தொழிற்சாலையில் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் விஜயன் தலைமையிலும் மத்திய அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வதோடு புதிதாக அறிவித்துள்ள யுபிஎஸ் திட்டத்தையும் ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடும் எந்த சங்கமாக இருந்தாலும் அதனுடன் இணைந்து போராடுவது என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலை முன்பு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இதில் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலை எம்ப்ளாயீஸ் யூனியன் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!