Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று உலக அஞ்சல் தினம்……புதுகையில் பேரணி

உலக அஞ்சல் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் இன்று
அஞ்சல் துறைஊழியர்கள் பேரணி நடத்தினர்.
தலைமை தபால் நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.
புதுக்கோட்டை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் கொடியசைத்து
பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணி அனைத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று  மீண்டும் தலைமை
தபால் நிலையத்தைஅடைந்தது.  அங்கு   உலக அஞ்சல் தினம் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது.பேரணியில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அஞ்சல்துறையின் சேவைகள் , சாதனைகள் அடங்கிய பதாகைகளை எடுத்து வந்தனர்.இந்த பேரணி  அஞ்சல்துறையின் சேவைகளை மக்கள்  அறியும் வகையில்அமைந்திருந்ததாக மக்கள்  பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!