Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுகஉறுப்பினர் அட்டை….. திருச்சியில் மாஜி அமைச்சர் செம்மலை வீடு வீடாக சென்று ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் பணிகளை பார்வையிடும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள  அதிமுக  அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் செ.செம்மலை , புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில்  கழகத்தினரின் வீடுகளுக்கு  நேரடியாக சென்று உறுப்பினர் அட்டைகள் முறையாக விநியோகிக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர் ப.குமார், மாவட்ட கழக அவைத்தலைவர் M அருணகிரி, மாவட்ட பாசறை செயலாளர் V.D.M.அருண் நேரு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் .G.செல்வி மேரி ஜார்ஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் I.விஜயா, ஒன்றிய அவைத்தலைவர் ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் M.கோவிந்தசாமி, சந்திரசேகர் ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் ,எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பி கே செல்வம் ,கிளைக் கழகச் செயலாளர் தனபாலு, முத்துகிருஷ்ணன், முருகேசன், குணசேகரன், தங்கவேலு, முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!