Skip to content

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம்…தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு…

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்தது.
அப்போது, இந்த திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்தது. மேலும் திரும்பப் பெற்ற பாட்டில்கள் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும். கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இத்திட்டத்தை அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!