Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சு….

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லகண்ணுவிற்கு 97 வயதாகிறது. இவர் கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.   இதையடுத்து அவர்  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். இதனையடுத்து மருத்துவர்கள் நல்லகண்ணுவைப் பரிசோதித்து பார்த்தனர். அதில் அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், நல்லக்கண்ணு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நல்லக்கண்ணுவிற்கு காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நல்லக்கண்ணுவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதன் பின்னர் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்லக்கண்ணு நலமுடன் இருக்கிறார் எனவும், இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!