இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “டில்லி, மும்பைக்கு கடந்த 5 நாட்களில் 3 டன் எடையிலான இனிப்பு வகைகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஷார்ஜா, அபுதாபி விமானங்களில் குறிப்பிடத்தக்க அளவு இனிப்புகள் அனுப்பப்படவில்லை.
தினமும் ஒரு டன் எடையிலான சரக்கு கொண்டு செல்லப்படும். அவற்றில் பெரும்பாலும் உணவு பொருட்களாக இருக்கும். தற்போதும் அதே நிலை தொடர்கிறது. பொங்கல் பண்டிகைக்கு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு விமானங்களில் அனுப்பி வைக்கப்படும். தீபாவளிக்கு உள்நாட்டு பிரிவில் மட்டும் இனிப்புகள் குறிப்பிடத்தக்க அளவு கையாளப்பட்டுள்ளன” என்றனர்.
