திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. மாநில துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ். ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தை தரக்குறைவாக பேசிய
டி.ஆர்.இ.யு. சங்கத்தின் பொதுச் செயலாளர்ரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான எஸ் ஆர் எம் யு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
