Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் காலமானார்

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசாராக இருந்தவர் பிபேக் டெப்ராய் (வயது 69) குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு உயிரிழந்தாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாக்டர். பிபேக் டெப்ராய் ஜி ஒரு உயர்ந்த அறிஞராக இருந்தார். பொருளாதாரம், வரலாறு, கலாசாரம்,அரசியல், ஆன்மீகம் என பல துறைகளில் நன்கு அறிந்தவர். அவரது படைப்புகள் மூலம் இந்தியாவின் அறிவுசார் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார்.எனக்கு பல வருடங்களாக டாக்டர் டெப்ராய் தெரியும். அவரது நுண்ணறிவு மற்றும் கல்விச் சொற்பொழிவு மீதான ஆர்வத்தை அன்புடன் நினைவில் வைத்திருப்பேன். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!